Friday, September 20, 2019

வாகனங்களின் உரிமையாளர் யார் | இன்று ஒரு இணையம்

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் வாகனங்களின் பதிவு எண்-ணை வைத்து அந்த வண்டியின் உரிமையாளர் யார் என இலவசமாகவும் சுலபமாகவும்  கண்டுகொள்ளலாம் 

நீங்கள் செய்யவேண்டியது செல்லிடை பேசிலோ (Smart Phone ) அல்லது கணினியிலோ (Computer) கிழ்கண்ட முகவரியை சொடுக்குவதன் மூலம் வாகனங்களின் தகவல்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் 

இணைய தள முகவரி: https://vahan.nic.in/nrservices/ 

எப்படி இணையத்தில் தகவலை பெறுவது என்று பாப்போம் 

மேல்கண்ட முகவரியை சொடுக்கியதும் உங்களை அது இங்கே கொண்டு செல்லும் 


பிறகு நீங்கள் Know Your Vehicle Details என்ற சிவப்பு கோடிட்ட இடத்தில் சொடுக்கவும்.


பிறகு நீங்கள் தேட வேண்டிய வாகனத்தின் பதிவு எண்-ணை அதற்கான கட்டத்தில் உள்ளிடவும், 
அதன் பின் அங்கு காண்பிக்கும் நம்பரை அதற்க்கான கட்டத்தில் உள்ளீடு செய்யவும் 

அதன் பிறகு Search  Vehicle என்ற பட்டனை சொடுக்குவதின் மூலம் தகவல்களை பெறலாம் 



தொகுப்பு: பாபு நடேசன் 

Wednesday, December 19, 2018

உங்கள் புகைப்படத்தை போட்டோஷாப் இல்லாமல் மாற்றுவது எப்படி? | இன்று ஒரு இணையம் | பாபு நடேசன்

நீங்க ஒரு புகைபடத்தை மாத்தணும் இல்லையோ கலர் மாத்தனும் அப்படின்னா போட்டோஷாப் மென்பொருள் நிறுவி அதன் பிறகு தான் மாற்ற வேண்டும் அல்லவா? 

இனி அது தேவை இல்ல..! இப்போ அலைபேசியிலேயே நிறைய செயலிகள் வந்தாலும் டெஸ்க்டாப் கணிப்பொறிகளில் செய்வதுபோல் நிறைவு எதிலும் வராது அல்லவா?

சரி..! இப்போ விசயத்துக்கு வருவோம். ஒன்லைனிலேயே அந்த மென்பொருளோடு கிடைச்சா எவ்வளவு அற்புதம்...!

சரி வாங்க அந்த இணையத்திற்கு போவோமா...!


இதுதான் இந்த தளம் 
https://pixlr.com/editor/ 

இதை பயன்படுத்த பிளாஷ் பிளேயர் உங்கள் கணினியில் இருக்க வேண்டும்.

போட்டோஷாப் போன்று எல்லா அமைப்புகளும், கருவிகளும் இருக்கிறது. சரி சீக்கிரம் போய்  உங்க போட்டோ பின் அமைப்புகளை மாற்றுங்கள் | பிடித்த நடிகர்/ நடிகைகளோடு உங்கள் புகைப்படத்தை இணையுங்கள்  | உங்கள் செல்ல குழந்தைகளின் புகைப்படங்களை ஸ்டூடியோவில் எடுத்தது  மாற்றுங்கள் 















நன்றி 
பாபு நடேசன் 

Sunday, November 12, 2017

ஆங்கில இலக்கணம் சரிபார்த்தல் | இன்று ஒரு இணையம்


நீங்கள் ஆங்கிலத்தில மின்னஞ்சல் அனுப்புவாரா? கடிதம் எழுதுறவரா? ஆங்கில இலக்கணம் கொஞ்சம் கஷ்டமா? இனி அதுக்கு கவலையே இல்லை....! என்ன எழுதணுமோ அதை எழுதி கீழ்கண்ட இணையத்துல உறுதி படுத்திக்கொள்ளுங்கள் | ஆங்கில இலக்கணம் சரிபார்த்தல், வரிகளை சரி பார்த்தல், சொற்சொடர்களை சரி பார்த்தல், எந்த வாக்கியத்தை எங்கு போடலாம், இணைப்பு வார்த்தைகளை சரி செய்தல் போன்றவற்றிக்கு மிகச்சிறந்த இணையம்...! இனி ஆங்கிலத்தில் அசத்துங்க...!

www.grammarcheck.net/editor/ | Online Grammar Check

First, write out your text as usual in any word processing program that you prefer. Review it yourself first to catch any stray words or thoughts and bring them in to order.

When you’re done, enter your text into the form above (bookmark this page now for later use!)

Monday, June 12, 2017

HTML முற்காட்சி | HTML viewer | இன்று ஒரு இணையம்

HTML ல கோடிங் (programming) பண்ணுறீங்களா? நோட்பேட்ல  (notepad)  டைப் பண்ணி அப்புறம் அதை பிரௌசர்ல ஓபன் பண்ணி பார்க்கிற காலம் எல்லாம் போயேபோச்சு, இப்போ கோடிங்  பண்ணும்போதே ப்ரீவியூ காண்பிக்கிற இணையம் ஒன்னு இருக்கு.

The best real-time online HTML editor software kit with dynamic instant live visual preview and inline WYSIWYG editor using CKEditor and markup clean-up feature. Includes a HTML viewer, editor, compressor, beautifier and easy formatter. It's impossible to create invalid code with this free tool.


இங்கே (Click here) போய்  நீங்க HTML  கோடிங் பண்ணி உங்க வலைத்தலைத்தை நீங்களே உருவாக்குங்களேன்

HTML தெரியாதவங்க படிக்க இங்கே அழுத்துங்க

Wednesday, April 26, 2017

இன்று ஒரு இணையம் - இடையூறு இல்லா யூடூயூப் (YouTube) காணொளிகள் .

இன்று ஒரு இணையம் - 4 | இடையூறு இல்லா யூடூயூப்...!

யூடூயூப் (YouTube) தெரியாதவர்களே கிடையாது, இந்த தளத்தில்  எல்லா வகையான காணொளிகளையும் கண்டுகளிக்கலாம். இப்போவெல்லாம் கல்யாணம், காதுகுத்து, குத்து பாடல்கள், மேடை நாடகங்கள், கரகாட்டங்கள், மேடைப்பேச்சுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல் நாடகங்கள் அடிதடிகள் மற்றும் கிசுகிசுக்களை நேரடியாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.

இப்போது இளைஞர்கள் சினிமா படங்கள், தவற விட்ட தொலைக்காட்சி தொடர்களை யூடூயூபில் தான் பார்க்கிறார்கள், அப்படி பார்க்கும் பொது விளம்பரம் ஒரு தடையாக இருக்கும், சில நேரங்களி 1 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும், தேவையற்ற விளம்பரங்களால் குழந்தைகள் பார்க்க நேரிடலாம் அல்லது பள்ளிக்கூடங்களில் பாடங்ககளை ஒளிபரப்பும்போது இந்த விளம்பரம்  இடையூறாக இருக்கும்.



 இவற்றை எல்லாம் தடுக்க, விளம்பரம் இல்லா காணொளிகளை காண ஒரு இணையதளம் நமக்கு இலவசமாக உதவுகிறது.

நீங்களும் விளம்பரம் இல்லா  படங்களை, நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்களே

எப்படி? 

யூடியூபில் நீங்கள் காணவேண்டிய காணொளியின் இணையதள முகவரியை (url) நகல் (copy) செய்து கொள்ளுங்கள்,

இப்போது கீழ் உள்ள இணையதளத்துக்கு சென்று உரை பெட்டியில் (text box) ஒட்டவும்.

ஒட்டிய பின் purify பட்டனை அழுத்தவும் | விளம்பரம் இல்லா காணொளியை கண்டு மகிழுங்கள். 

http://www.viewpure.com/

 வியூபியூர்.காம் 



Monday, April 24, 2017

இன்று ஒரு இணையம் | கோப்புகளின் அளவு மாற்றி [bytes converter] | பாபு நடேசன்

இன்று ஒரு இணையம்-3

கணிப்பொறிகளில் கோப்புகளின் அளவுகள் பொதுவாக 5 வகையாக பிரிக்கின்றார்கள்.

  1. பைட்ஸ் (Byte)
  2. மெகா பைட் (Megabyte)
  3. ஜிகா பைட்  (Gigabyte)
  4. டெரா பைட் (Terabyte)
சில நேரங்களில் அந்த  கணிப்பொறி (கோப்புகள்) தரவுகளின் அளவுகள் வெறும் (பைட்) எண்களாக மட்டுமே இருக்கும் அதனை மாற்ற கணிப்பு கருவி  (கால்குலேட்டர்) கொண்டு மாற்றி அளவிட நேரிடலாம்.



இதனை சுலபமாக மாற்றி கணக்கிட ஒரு இணையம் உள்ளது. இதில் பைட்டு -டிலிருந்து டெரா பைட்டு வரை கணக்கிடலாம். இதில் மிக சிறப்பு என்னவென்றால் எல்லா அளவுகளையும் ஒரே நேரத்தில் கணக்கிடலாம். அதாவது ஜிகா பைட்டு கணக்கிட்டால் பைட்டு முதல் டெரா பைட்டு வரை கணக்கிட்டு காட்டும் சிறப்பை கொண்டது.



 வாங்க அந்த தளத்திற்கு போவோம்  

வாட்இஸ்பைட்.காம்




Thursday, April 20, 2017

இன்று ஒரு இணையம் | கதை பேசி சமைக்கலாமா! | பாபு நடேசன்

இன்று ஒரு இணையம்: 2

இன்றைய தொழில்நுட்பத்தில் எல்லாம் சாத்தியமே, ஆம் 1999 -2000 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் சார்ந்த இணையங்கள் மிக மிக குறைவு, தமிழில் கூகிள் கூட வாக்கியங்களை கொடுத்தால் தேடாது, இணையம் இல்லாத காலங்களில் எதாவது வேண்டும் அல்லது கை வைத்தியம்   வேண்டும் என்றல் நாட்டு வைத்தியர் அல்லது பக்கத்து வீட்டு பாட்டியிடம் தான் கேட்க வேண்டும்,

எங்கேயாவது விருந்துக்கு போய்  சாப்பிடும்போது அவர்கள் வைத்த குழம்பு நன்றாக இருக்கும், அதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டு வந்து வீட்டில் செய்வார்கள்.

இன்று ஒரு இணையம்:

கதைகளும் அப்படிதான் நாம் பாடியிடமே கேட்டு தெரிந்து கொண்டோம், காலப்போக்கில் ராணி காமிக்ஸ் வந்தது, அதன் பிறகு எண்ணற்ற புத்தகங்கள்.

குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றாலும் மருத்துவரையே நாடுவோம், லேசான உடல் காய்ந்தாலும் நாம் மருத்துவரிலாம் தான் போவோம். இவைகளுக்கெல்லாம் அருமையான செய்திகளோடும் படங்களோடும் தமிழிலேயே சிறப்பாக ஒரே இடத்தில் கொடுக்கிறது ஒரு இணையத்தளம்.

நிறைய தளங்கள் இதைப்போன்று செய்தாலும் இதில் மிக சிறப்பு இணையத்தின் மன்றம் தான், மன்றத்தில் நீங்கள் கேள்வி கேட்டால் உடனே யாரவது பதில் தருவார்கள்,

குழந்தைகளுக்கான கை வைத்தியம்
மகப்பேறு காலத்திற்கான ஆலோசனைகள்,
கருத்தரிப்புக்கான ஆலோசனைகள்,
குழந்தைகளுக்கான சமையல்கள்,
கைவினை பொருட்கள் செய்தல், 
பலவகை சமையல், 
கதைகள், அழகு கலை, 
கவிதைகள், 
கோலங்கள்
என பன்முகங்களை தாங்கி வருகிறது. நீங்களும் தான் சென்று பாருங்களேன்.

அறுசுவை.காம்