Wednesday, April 26, 2017

இன்று ஒரு இணையம் - இடையூறு இல்லா யூடூயூப் (YouTube) காணொளிகள் .

இன்று ஒரு இணையம் - 4 | இடையூறு இல்லா யூடூயூப்...!

யூடூயூப் (YouTube) தெரியாதவர்களே கிடையாது, இந்த தளத்தில்  எல்லா வகையான காணொளிகளையும் கண்டுகளிக்கலாம். இப்போவெல்லாம் கல்யாணம், காதுகுத்து, குத்து பாடல்கள், மேடை நாடகங்கள், கரகாட்டங்கள், மேடைப்பேச்சுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல் நாடகங்கள் அடிதடிகள் மற்றும் கிசுகிசுக்களை நேரடியாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.

இப்போது இளைஞர்கள் சினிமா படங்கள், தவற விட்ட தொலைக்காட்சி தொடர்களை யூடூயூபில் தான் பார்க்கிறார்கள், அப்படி பார்க்கும் பொது விளம்பரம் ஒரு தடையாக இருக்கும், சில நேரங்களி 1 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும், தேவையற்ற விளம்பரங்களால் குழந்தைகள் பார்க்க நேரிடலாம் அல்லது பள்ளிக்கூடங்களில் பாடங்ககளை ஒளிபரப்பும்போது இந்த விளம்பரம்  இடையூறாக இருக்கும்.



 இவற்றை எல்லாம் தடுக்க, விளம்பரம் இல்லா காணொளிகளை காண ஒரு இணையதளம் நமக்கு இலவசமாக உதவுகிறது.

நீங்களும் விளம்பரம் இல்லா  படங்களை, நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்களே

எப்படி? 

யூடியூபில் நீங்கள் காணவேண்டிய காணொளியின் இணையதள முகவரியை (url) நகல் (copy) செய்து கொள்ளுங்கள்,

இப்போது கீழ் உள்ள இணையதளத்துக்கு சென்று உரை பெட்டியில் (text box) ஒட்டவும்.

ஒட்டிய பின் purify பட்டனை அழுத்தவும் | விளம்பரம் இல்லா காணொளியை கண்டு மகிழுங்கள். 

http://www.viewpure.com/

 வியூபியூர்.காம் 



Monday, April 24, 2017

இன்று ஒரு இணையம் | கோப்புகளின் அளவு மாற்றி [bytes converter] | பாபு நடேசன்

இன்று ஒரு இணையம்-3

கணிப்பொறிகளில் கோப்புகளின் அளவுகள் பொதுவாக 5 வகையாக பிரிக்கின்றார்கள்.

  1. பைட்ஸ் (Byte)
  2. மெகா பைட் (Megabyte)
  3. ஜிகா பைட்  (Gigabyte)
  4. டெரா பைட் (Terabyte)
சில நேரங்களில் அந்த  கணிப்பொறி (கோப்புகள்) தரவுகளின் அளவுகள் வெறும் (பைட்) எண்களாக மட்டுமே இருக்கும் அதனை மாற்ற கணிப்பு கருவி  (கால்குலேட்டர்) கொண்டு மாற்றி அளவிட நேரிடலாம்.



இதனை சுலபமாக மாற்றி கணக்கிட ஒரு இணையம் உள்ளது. இதில் பைட்டு -டிலிருந்து டெரா பைட்டு வரை கணக்கிடலாம். இதில் மிக சிறப்பு என்னவென்றால் எல்லா அளவுகளையும் ஒரே நேரத்தில் கணக்கிடலாம். அதாவது ஜிகா பைட்டு கணக்கிட்டால் பைட்டு முதல் டெரா பைட்டு வரை கணக்கிட்டு காட்டும் சிறப்பை கொண்டது.



 வாங்க அந்த தளத்திற்கு போவோம்  

வாட்இஸ்பைட்.காம்




Thursday, April 20, 2017

இன்று ஒரு இணையம் | கதை பேசி சமைக்கலாமா! | பாபு நடேசன்

இன்று ஒரு இணையம்: 2

இன்றைய தொழில்நுட்பத்தில் எல்லாம் சாத்தியமே, ஆம் 1999 -2000 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் சார்ந்த இணையங்கள் மிக மிக குறைவு, தமிழில் கூகிள் கூட வாக்கியங்களை கொடுத்தால் தேடாது, இணையம் இல்லாத காலங்களில் எதாவது வேண்டும் அல்லது கை வைத்தியம்   வேண்டும் என்றல் நாட்டு வைத்தியர் அல்லது பக்கத்து வீட்டு பாட்டியிடம் தான் கேட்க வேண்டும்,

எங்கேயாவது விருந்துக்கு போய்  சாப்பிடும்போது அவர்கள் வைத்த குழம்பு நன்றாக இருக்கும், அதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டு வந்து வீட்டில் செய்வார்கள்.

இன்று ஒரு இணையம்:

கதைகளும் அப்படிதான் நாம் பாடியிடமே கேட்டு தெரிந்து கொண்டோம், காலப்போக்கில் ராணி காமிக்ஸ் வந்தது, அதன் பிறகு எண்ணற்ற புத்தகங்கள்.

குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றாலும் மருத்துவரையே நாடுவோம், லேசான உடல் காய்ந்தாலும் நாம் மருத்துவரிலாம் தான் போவோம். இவைகளுக்கெல்லாம் அருமையான செய்திகளோடும் படங்களோடும் தமிழிலேயே சிறப்பாக ஒரே இடத்தில் கொடுக்கிறது ஒரு இணையத்தளம்.

நிறைய தளங்கள் இதைப்போன்று செய்தாலும் இதில் மிக சிறப்பு இணையத்தின் மன்றம் தான், மன்றத்தில் நீங்கள் கேள்வி கேட்டால் உடனே யாரவது பதில் தருவார்கள்,

குழந்தைகளுக்கான கை வைத்தியம்
மகப்பேறு காலத்திற்கான ஆலோசனைகள்,
கருத்தரிப்புக்கான ஆலோசனைகள்,
குழந்தைகளுக்கான சமையல்கள்,
கைவினை பொருட்கள் செய்தல், 
பலவகை சமையல், 
கதைகள், அழகு கலை, 
கவிதைகள், 
கோலங்கள்
என பன்முகங்களை தாங்கி வருகிறது. நீங்களும் தான் சென்று பாருங்களேன்.

அறுசுவை.காம்

Wednesday, April 19, 2017

இன்று ஒரு இணையம் | படிப்பது எல்லோருக்கும் பொதுவானது | பாபு நடேசன்

இன்று ஒரு இணையம்: 1 | இ - புத்தகம்

இன்று ஒரு இணையம் முதல் பதிவாக எல்லோருக்கும் பொதுவாக பயன்படும் புத்தகங்களை பற்றியது தான்.

படிப்பது எல்லோருக்கும் பொதுவானதுதான், ஆனால் காலபோக்கில் இளையதலைமுறையினர் யாரும் செய்திதாள்களோ அல்லது வாராந்திர புத்தகங்களோ வாங்குவது குறைந்து வருகிறது. அனைவரும் இணையதிலேயே படித்தது வருவது அதிகமாகி வருகிறது.  

நமக்கு தேவையான அனைத்து நூல்களும் இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து படிக்கலாம் 

இன்று ஒரு இணையம்


உதாணமாக: 
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
கார்ல் மார்க்ஸ் புத்தகங்கள்
தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள்
தமிழில் கம்ப்யூட்டர் புத்தகங்கள்
திருக்குறள் 
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம்
பாரதியார் பாடல்கள்
பொன்னியன் செல்வன்
பாட்டி வைத்தியம்
சமையல் குறிப்புகள்
சைவ சித்தாந்த நூல்கள்

அனைத்து வகையான நூல்களும் மின்னூல்களாக தரவிறக்கம் செய்து படிக்க கீழ் உள்ள இணையத்தளத்தை சொடுக்கவும் 

FreeTamilEbooks.com

தமிழ் புத்தக அலமாரி

https://senthilvayal.com/e-books/

http://books.tamilcube.com/tamil/

செந்தமிழ்.ஆர்க் 


இது புத்தகங்கங்களை  பற்றிய தொகுப்பானதால் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பதிய நேரிட்டது.

இன்று ஒரு இணையம் | உங்களுக்கும் உபயோகப்படும்

வணக்கம் நண்பர்களே,

இன்று ஒரு இணையம் எனக்கு தெரிந்த, நமக்கு உபயோகமான வலைத்தளங்களை இங்கே பதிவு செய்வது தான், இதில் தமிழ் மட்டுமல்லாது ஆங்கில வலைத்தளமும் இணைக்கப்படும்

உங்களுக்கு உபயோகப்படும் என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கும் உபயோகப்படும் அல்லவா? ஆகையால் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.